பிரான்ஸ் நாட்டில் திருமணமான இலங்கைப் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த காதலன் மீது சர மாரி வாள் வெட்டு

கணவனுடன் பிரான்ஸ் சென்ற மனைவி இரு கிழமைகளிலேயே தனது காதலனுடன் ஓடிய நிலையில், தற்போது காதலன் மீது சரமாரி கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது குறித்த காதலனின் கை துண்டாகியுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் கிளிநொச்சியை சேர்ந்த யுவதியை பிரான்ஸில் வாழும் முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர் ஒருவரை மணமுடித்துள்ளார்.

பின் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தனது இளம் மனைவியை கடந்த மாதம் பிரான்சிற்கு அழைத்துள்ளார்.

பிரான்ஸ் வந்த மனைவி இரு கிழமைகளிலேயே தான் காதலித்து வந்த காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான முழு விபரங்களையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததுடன் தான் படுகின்ற வேதனையை இனி எவரும் அனுபவிக்க கூடாது என்றும் புரோக்கர்கள் மூலம் செய்யப்படுகின்ற திருமணத்தை நன்கு விசாரித்து உண்மை நிலையை அறிந்து திருமணம் செய்யுமாறும் 2009 முன் இருந்த பெண்கள் இப்போது இல்லை என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார் அந்த பெண்ணின் கணவன்.

இந்த நிலையில் குழுவொன்று அந்த பெண்ணையும் அவரின் காதலனையும் துரத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக இருவரும் பேருந்தொன்றில் ஏற முற்பட்டுள்ளனர்.

எனினும் பேருந்தின் கதவு மூடப்பட்டிருந்ததால் பேருந்திற்குள் செல்ல முடியாத நிலையில் காதலன் கத்தி வெட்டிற்கு இலக்காகி கையை இழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க :   உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் ஹாட்லி கல்லூரி மாணவன் முதலிடம்

Related Posts

About The Author

Add Comment