அதிர்ச்சி சம்பவம் போலீஸ்காரரை தாக்கிய பிக்பாஸ் ஜூலி மற்றும் அவரது காதலர்!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி அதன்பிறகு அந்த புகழை பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.

அதன்பிறகு அவர் தற்போது டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஜூலி மற்றும் அவரது காதலர் ரஜிதிப்ரான் என்பவருடன் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் வண்டியை ரிவர்ஸ் எடுக்கும்போது அது ஒரு டூ வீலரின் மீது மோதியுள்ளது.

அந்த வண்டி ஒரு போலீஸ் காரருக்கு சொந்தமானது. அவர் சாதாரண உடையில் இருந்த நிலையில் ‘நான் போலீஸ்’ என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் ஜூலி மற்றும் அவரது காதலரும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அந்த போலீஸ்காரரை தாக்கியுள்ளனர்.

இது போலீஸ் நிலையம் வரை செல்ல, ஜூலி தரப்பு பணம் கொடுத்து சமாதானம் பேசி வழக்கு பதியாமல் தடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்க :   பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் தற்போதைய நிலை, என்ன ஆனார் தெரியுமா ?

Related Posts

About The Author

Add Comment