கூகுள் நிறுவனத்தில் தலைமை பொறுப்பை ஏற்ற பிரபல பாலிவுட் நடிகை!

பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் பல படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை மயூரி காங்கோ கூகுள் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பை ஏற்றுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக நடிகைகள் சினிமாவை விட்டு விலகி, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டால், மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கிறார் பாலிவுட் நடிகை மயூரி காங்கோ.

இவர், பத்தாம் வகுப்பு முடிந்ததும் தன்னுடைய 15 வயதில் நடிக்கத் தொடங்கினார். பல பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும், இந்தி சீரியல்களிலும் நடித்தார்.

2000ஆம் ஆண்டு, தன்னுடைய நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, அமெரிக்காவை சேர்ந்த என்.ஆர்.ஐ ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

பின் படிப்பில், கவனம் செலுத்த தொடங்கினார். அமெரிக்காவிலேயே மார்க்கெட்டிங் பினான்ஸ் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தார். தற்போது இந்தியா வந்து செட்டிலாகி உள்ள மயூரி காங்கோ… கூகுள் நிறுவனத்தின் தொழில் தலைவராகவும் பணியில் சேர்த்துள்ளார். இதற்கு பலர் இவரை இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க :   அறிமுகமாகியது Android Nougat இயங்குதளம்!!

Related Posts

About The Author

Add Comment