பெண்களின் காம ஆசையை தூண்டும் பில்பென்சரின் வயகரா!

எப்படி இருக்கும்?
பெண்களுக்கான வயகராவான பில்பென்சரின் 2015 ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்களுக்கான வயகரா அவர்களின் விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தி நீண்ட நேரம் உறவில் ஈடுபட உதவும். ஆனால் பெண்களை பொறுத்தவரையில் இது வேறுமாதிரி வேலை செய்யும். இது பிங்க் நிறத்தில் சிறிய மாத்திரையாக இருக்கும்.

எப்போது வழங்குவார்கள்?
மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகும் அவர்கள் சில சோதனைகள் செய்த பிறகும் மட்டுமே பெண்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படும். அதேபோல இதனை ஒருபோதும் மதுவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை மிகவும் கீழ்நிலைக்கு கொண்டு செல்வதுடன் உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?
பெண்கள் வயகராவை எப்போதும் படுக்கைக்கு செல்வதற்கு முன்னால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாக சாப்பிட்டும் அதன் பலன்கள் எதுவும் தெரியவில்லை என்றால் அதனை சாப்பிடுவதை நிறுத்திவிடவும்.

மூளையின் செயல்பாடு
ஆண்கள் வயகரா அவர்களின் ஆணுறுப்பின் மீது செயல்படும் ஆனால் பெண்கள் வயகரா அவர்களின் பிறப்புறுப்பை காட்டிலும் மூளையின் மீது அதிகம் செயல்படும். இது பெண்களுக்கு உறவில் அதிக நாட்டத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களின் மூளையில் செயல்பட்டு மனஅழுத்தத்தை போக்குவதுடன் மகிழ்ச்சி ஹார்மோன்களான டோபமைன் போன்றவற்றை சுரக்க வைக்கிறது. சொல்லப்போனால் முதலில் இது பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்கத்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது நாளடைவில் இது வயகராவாக மாற்றப்பட்டது.

யாரெல்லாம் எடுத்து கொள்ளக்கூடாது?
பொதுவாக தாம்பத்யம் திருப்தியாக இருக்கும் பெண்களுக்கு இது தேவையில்லை. மேலும் கல்லீரல் பிரச்சினைகள், நரம்பு மண்டல பிரச்சினைக்காக வேறு மருந்துகள் எடுத்து கொள்பவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளக்கூடாது.

எப்போது வேலை செய்யும்?
ஆண்கள் வயகரா பொதுவாக உடனடியாக வேலை செய்யும், ஆனால் பெண்கள் வயகரா அப்படியில்லை, இதை நீங்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வேலை செய்ய தொடங்க ஒரு மாதமாவது தேவைப்படும். சில பெண்களுக்கு எட்டு வாரங்கள் கூட ஆகலாம்.

இது ஆண்கள் வயகரா போன்றதல்ல
பெண்கள் வயகரா ஆண்கள் வயகராவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வயகரா ஆண்களின் விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தும். பெண்கள் வயகராவோ பாலியல் ஆசை இல்லாத பெண்களுக்கு பாலியல் ஆசையை தூண்டும். ஆண்கள் வயகரா அவர்களை நன்றாக செயல்பட தூண்டும், ஆனால் பெண்கள் வயகரா அவர்களின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை சுரக்கவைத்து அவர்களின் ஆசையை தூண்டும்.

பக்க விளைவுகள்
பக்க விளைவுகள் இல்லாத பொருட்கள் என்று எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அதன்படி இதனாலும் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில பெண்களுக்கு தலைவலி, தூக்கமின்மை, சோர்வு, மயக்கம் வாய் உலர்ந்து போவது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

எப்போதெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது?
பெண்கள் வயகராவில் மேலும் சில குறைபாடுகளும் உள்ளது. கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்ளும்போதும், மது அருந்தும்போதும் இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது. பாலியலில் முழு திருப்தியும் வேண்டுமெனில் நீங்கள் சிலவற்றை விட்டுக்கொடுத்துதான் ஆகவேண்டும்.

இதையும் படியுங்க :   அடர்த்தியான புருவத்தை தரும் கற்றாழை சீரம்!!

Related Posts

About The Author

Add Comment