அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க துவங்கி விட்ட பேட்ட பட நடிகை!…

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்க துவங்கி இருந்தாலும், இந்த படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது. இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி கொண்டே போகிறது. இவரின் கைவசம் தற்போது தமிழில் ‘ஒரு பக்க கதை’ மற்றும் தெலுங்கில் ஒரு படம் மட்டுமே உள்ளது.

மேலும் இவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களும், இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் பின்வாங்க துவங்கி விட்டார்களாம். இதனால் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ் தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க துவங்கி விட்டாராம். தெலுங்கில் வைஷ்னவ் தேஜ் என்ற அறிமுக நடிகருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க :   வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருந்த தாய்!

Related Posts

About The Author

Add Comment