திருமணத்துக்கு மணமகன் தேவை என பதிவிட்ட பூஜா அதிர்ச்சி அடைந்த கணவன்!…

இந்தியாவில் நபர் ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட சில வாரங்களிலேயே அவரின் உண்மை முகம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் கசியாபாத்தை சேர்ந்தவர் அர்விந்த் மிஸ்ரா. விவாகரத்து ஆன இவர் இரண்டாம் திருமணம் செய்யும் நோக்கில் தன்னை பற்றிய தகவல்களை திருமண தகவல் மையத்தில் ஓன்லைன் மூலம் பதிவிட்டார்.

இதையடுத்து பூஜா தாகூர் என்ற பெண் அர்விந்தை தொடர்பு கொண்டு தானும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்று கூறி அவருடன் நட்பானார்.

பின்னர் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து போக ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு முன்னர் பூஜாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் அர்விந்த், அவரை பற்றி விசாரித்துள்ளார்.

திருமணம் முடிந்து அர்விந்த் – பூஜா தேனிலவு சென்று விட்டு வீடு திரும்பிய போது கடைக்கு செல்வதாக கூறி பூஜா வெளியில் சென்றார்.

ஆனால் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அர்விந்த், திருமண தகவல் மையத்தின் ஓன்லைன் பக்கத்தில் பூஜாவின் சுயவிபரங்கள் இன்னும் உள்ளதா என தேடினார்.

அப்போது திருமணத்துக்கு மணமகன் தேவை என மீண்டும் பூஜா பதிவிட்டதை பார்த்து அர்விந்த் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பூஜா குறித்து விசாரித்ததில் அவர் இதுவரை பலபேரை பல பெயர்களில் பணத்துக்காக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசில் அர்விந்த் புகார் கொடுத்தார். அதில் தேனிலவின் போது பூஜாவுக்கு ரூ. 80000 மதிப்புள்ள பரிசுகளை வாங்கி கொடுத்தேன், இதோடு என்னிடம் ரூ 1.5 லட்சம் பணம் வாங்கி கொண்டார்.

மேலும் சில தினங்களுக்கு முன்னர் எனக்கு போன் செய்த பூஜா தனக்கு ரூ. 15 லட்சம் கொடுக்கவில்லை என்றால் தன்னை ஏமாற்றிவிட்டதாக என் மீது பொலிஸ் புகார் கூறுவேன் என மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பூஜா மற்றும் அவரின் உறவினர்கள் 8 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதையும் படியுங்க :   ஜனாதிபதி இணையத்தில் ஊடுருவிய சம்பவம்: விரைவில் அறிக்கை

Related Posts

About The Author

Add Comment