மாணவியை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் கும்பல்!…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைப் போன்று சென்னையிலும் கல்லூரி மாணவியை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் கும்பல் பிடிபட்டுள்ளனர்.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் நட்பாகப் பழகுவது போல் பழகி நூற்றுக்கணக்கான பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்தும், பணம் பறித்தும் ஒரு கூட்டமே செயல்பட்டு, அந்த வழக்கில் நான்கு பேர் சிறையில் இருப்பதே இன்னும் மக்கள் மனதில் இருந்து கொண்டு இருக்கிறது.

சென்னையிலும் ஒரு சம்பவம்

நீங்காத சூழலில் சிறுமி பாலியல் கொலை என்று பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையிலும் தன்னுடன் பழகுகிற பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் கும்பலொன்று சிக்கியிருக்கிறது.

இன்ஸ்டாவில் பள்ளித் தோழி

ஸ்ரீநாத் என்கின்ற கல்லூரி மாணவன் ஒருவன் தன்னுடன் பள்ளியில் படித்த, தற்போது சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிற தோழியுடன் இன்ஸ்டகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு மீண்டும் நட்பாகப் பழகி வந்துள்ளார்.

சதி திட்டம்

இன்ஸ்டாவில் தொடர்ந்து நட்பாகப் பழகி வந்த அந்த இளைஞன் கடந்த வாரத்தில் ஒரு நாள் நான் வந்து உன்னை அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டுவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். அந்த பெண்ணும் சரி என்று அந்த இளைஞனுடன் சென்றிருக்கிறார்.

விருந்து

கல்லூரிக்கு அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி அழைத்துச் சென்ற மகாபலிபுரம் நோக்கி வண்டியை விடவே, அந்த மாணவி ஏன் வழி மாறி போகிறோம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன் என்னுடைய நண்பர்கள் விருந்து (ட்ரீட்) ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அங்கே சென்று சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்குப் போகலாம் என்று சொல்லி மகாபலிபுரம் ஹோட்டல் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.

ஆபாச வீடியோ

ஏற்கனவே திட்டமிட்டு தான் இந்த காரியம் அரங்கேறுகிறது என்பதால், ஏற்கனவே அறை ரூம் ஒன்றை புக் செய்து வைத்திருந்தான் ஸ்ரீநாத். இந்நிலையில் இவர்கள் இருவரும் அறையில் தனியாக இருக்கும் போது, அறையின் ஜன்னல் வழியாக திட்டமிட்டது போல, ஸ்ரீநாத்தின் நண்பர் லோகேஷ் என்பவன் இவர்கள் இருவரையும் ஆபாசப் படம் எடுத்திருக்கிறான். இது தெரியாமலேயே மாணவியும் கல்லூரிக்குச் சென்று விட்டாள்.

விடியோ மிரட்டல்

அப்படி எடுக்கப்பட்ட ஆபாச விடியோவை அந்த பெண்ணுக்கு தனியாக இருக்கும் சமயம் பார்த்து ஸ்ரீநாத் அனுப்பியிருக்கிறான். அதைப் பார்த்த அந்த பெண் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், நான் கூப்பிடும்போதெல்லாம் என்னுடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த விடியோவை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறான்.

கூட்டுப் பாலியல் முயற்சி

அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே அந்த பெண்ணை தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து வரவழைத்து தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். அதையும் மறைந்திருந்து லுாகேஷ் என்பவன் விடியோ எடுத்திருக்கிறான். மீண்டும் அந்த விடியோவையும் அந்த பெண்ணுக்கு இதை என் நண்பன் தான் எடுத்திருக்கிறான். என்னுடைய நண்பனுடன் நீ உடன் படி வேண்டும். அவனை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்று மிரட்டியிருக்கிறான்.

கல்லூரிக்குத் தடை

அதைத் தொடர்ந்து கல்லூரிக்குச் செல்வதை விட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கியிருந்தவரை பெற்றோர்கள் விசாரிக்க, அழுதுகொண்டே நடந்த விஷயங்களை பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். அதன்பின் பெற்றோர்கள் கொடுத்த வழக்கின் பேரில் அந்த இரண்டு மாணவர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மாணவிகள் உஷார்

இப்படி எந்த ரூபத்தில் பெண்களுக்குத் தொல்லை வரும் என்பதே கணிக்க முடியாத சூழலில் தன்னுடன் படித்த தோழியையே இப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கும் செயல் பெரும் அதிர்ச்சியைத் தான் உண்டு பண்ணியிருக்கிறது. அதனால் மாணவிகள் தன்னுடன் பயிலும் நண்பனாகவோ உறவினராகவோ இருந்தாலும் கூட தனியாக செல்லக் கூடாது. சிறிதாக அவர்கள் முறை தவறி நடந்து கொள்வது போல் உணர்ந்தால் உடனே வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ அல்லது காவல் துறையின் உதவியையோ நாடுவது நல்லது. மாணவிகள் மிக உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்க :   பல ஆண்களுடன் விடிய விடிய உல்லாசம் அனுபவித்து கணவனை தேர்ந்தெடுக்கும் பெண்கள்! எங்கு தெரியுமா?

Related Posts

About The Author

Add Comment