விஜய் க்கு ஜோடி சேரும் வாணி போஜன்!..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து செம்ம பேமஸ் ஆனவர் வாணி போஜன். இவர் சீரியலை தொடர்ந்து வைபவ் நடித்திருந்த மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.

இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிய கையோடு தெலுங்கிலும் கதநாயகியாகியுள்ளார் வாணி போஜன்.

இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தை டோலிவுட்டின் ரௌடி என செல்லமாக அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா தயாரிக்கிறார். இயக்குநர் தருண் பாஸ்கர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தை சென்னையை சேர்ந்த குறும்பட இயக்குனர் சமீர் என்பவர் இயக் கு கிறார். இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை கேட்டறிந்த வாணி போஜன் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்க :   அஜித் நடிப்பை நிறுத்துவார் – அரசியலில் குதிப்பார் – பிரபல ஜோதிடர் கணிப்பு!

Related Posts

About The Author

Add Comment