கிராபிக்ஸ் பண்ணியும் வசமாக மாட்டிக் கொண்ட பிரபல நடிகை

புதிய படவாய்ப்புகளுக்காக நடிகை செய்த தில்லுமுல்லு வேலைகள் எல்லாம் தற்போது சாயம் வெளுத்து விட்டது.

நம்பர் நடிகைக்கு முன்பே தனி நாயகியாக முழுப் படத்தையும் தோளில் தாங்கிய முன்னணி நடிகை அவர். தமிழின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர், வித்தியாசமாக நடிப்பதாக நினைத்துக் கொண்டு படமொன்றிற்காக உடல் எடையை அதிகரிக்க வைத்தார்.

அப்போது ஆரம்பித்தது பிரச்சினை. படத்திற்காக கூடிய எடையை அதன்பிறகு நடிகையால் குறைக்கவே இயலவில்லை.

டயட்:
தில்லாலங்கடி:

நடிகையும் டயட், யோகா என எல்லாப் பக்கமும் முயற்சித்துப் பார்த்து விட்டார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் புதிய படவாய்ப்புகளுக்காக நடிகை தில்லாலங்கடி வேலை செய்ய முடிவு செய்தார்.

கிராபிக்ஸ்:
ஸ்லிம் பியூட்டி:

அதன்படி, இரண்டாம் பாகம் படத்தில் செய்தது போல், தனது புகைப்படங்களை கிராபிக்ஸ் மூலம் மாற்றினார். ஸ்லிம் பியூட்டியாக தன்னுடைய புகைப்படங்களை இயக்குநர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். சமூகவலைதளங்களில் வெளியான அந்தப் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்களும் ஆச்சர்யத்தில் வாயடைத்தனர்.

அழகு:
நேரில் அஞ்சலி:

முன்பைவிட நடிகை இளமையாக, அழகாக மாறி விட்டதாக எல்லோருமே நம்பினர். ஆனால், நடிகையின் இந்த வேடம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தனது ஆஸ்தான இயக்குநரின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த சென்றபோது, மீடியாக்களின் கேமராக்கண்ணில் சிக்கினார் நடிகை.

அதிர்ச்சி:
சாயம் வெளுத்தது:

போட்டோவில் பார்த்த நடிகையா என அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் அதே பழைய குண்டு உடலுடன் தான் அதில் இருந்தார் நடிகை. இதன் மூலம் நடிகையின் சாயம் வெளுத்துப் போனது. எந்த நம்பிக்கையில் போட்டோவை மட்டுமே பார்த்து புதிய பட வாய்ப்பு கிடைக்கும் என நடிகை மனக்கணக்கு போட்டார் என திரைத்துறையினர் நடிகையை கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்க :   49 வயதில் திருமணம்! மகளின் சம்மதத்துடன்

Related Posts

About The Author

Add Comment