தாலி கட்டும் முன் விஷாகன் போட்ட கண்டிஷன் – சவுந்தர்யா மனம் திறந்தார்!..

விஷாகனை திருமணம் செய்து கொள்வதற்கு முன் நடந்த பல சுவாரஷ்யமானவிஷயங்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில், தொழில் அதிபரும், நடிகருமான விஷாகனை கடந்த பிப்ரவரி மாதம் சவுந்தர்யா ரஜினிகாந்த் 2வது திருமணம் செய்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். திருமணத்தில் முகூத்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போது, என் மகன் வேத் அங்கே இல்லை. அது எனக்கு டென்ஷனாக இருந்தது. அதை புரிந்து கொண்ட விஷாகன், வேத் வரும் வரை நான் தாலி கட்ட மாட்டேன் என என்னிடம் கூறினார். அந்த அளவுக்கு அவர் அவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர்களின் தந்தை –

மகன் பிணைப்பு எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. எங்களின் திருமணத்துக்கு அவனிடம் அனுமதி கேட்டதை வீடியோ எடுத்து வைத்துள்ளோம். அதை, அவனுக்கு 18 வயது ஆகும்போது போட்டுக் காட்டுவோம் என தெரிவித்தார்.

இதையும் படியுங்க :   நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்!

Related Posts

About The Author

Add Comment