49 குழந்தைகளுக்கு தந்தையான வைத்தியர்!…

டாக்டரிடம் நடத்திய விசாரணையில் இதுவரை அவர் சட்டவிரோதமாக தனது விந்தணுக்களை பெண்களின் கருமுட்டைக்குள் செலுத்தியதன் மூலம் இதுவரை 49 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது

நெதர்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் டச்சு நாட்டை சேர்ந்த ஒரு டாக்டர்பணியாற்றி வந்தார். அவர் அந்த மருத்துவமனை கருத்தரிப்பு பிரிவில் டாக்டராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னிடம் செயற்கை கருதரிப்பிற்காக வரும் பெண்களிடம் அவர்களின் அனுமதியின்றி தன்னுடைய விந்தணுக்களை அவர்களின் கருவிற்குள் செலுத்தி அவர்களை கருவுற்று குழந்தை பெற்றெடுக்க செய்துள்ளார்.

இந்த டாக்டரின் குழந்தையை செயற்கை கருத்தரித்தல் மூலம் பெற்ற பெண் ஒருவர் தனது குழந்தையின் செயல்பாடுகள் சில டாக்டரின் செயல்பாடுகளை ஒத்துள்ளதால் சந்தேகமடைந்தார்.

இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு அந்த பெண் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க :   27 பெண்கள் குளிப்பதை நிர்வாணமாக வீடியோ எடுத்த வாலிபர்.!

Related Posts

About The Author

Add Comment