ஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு!..

நடிப்பு வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரான கிச்டி மூலம் பிரபலமானவர் ரிச்சா பத்ரா. குழந்தை நட்சத்திரமாக பிரபலமாக இருந்த அவர் வளர்ந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

திருமணமான பிறகு அவருக்கு நடிப்பை தொடரும் ஆசை ஏற்படட்டபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது. இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியதாவது,

திருமணம்
ஆடிஷன்

திருமணத்திற்கு பிறகு நான் ஆடிஷனுக்கு சென்றேன். ஆனால் வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று கூறினார்கள். ஒரு காஸ்டிங் டைரக்டரோ, என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால், உனக்கு வேலை தருகிறேன் என்றார்.

ஹோட்டல்
சந்திப்பு

நடிக்க ஆசையிருந்தால் ஹோட்டலுக்கு வந்து என்னை சந்தித்து மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்று காஸ்டிங் டைரக்டர் கூறினார். நான் காபி ஷாப்பில் சந்திக்கலாம் என்று கூறியதை அவர் ஏற்கவில்லை.

படுக்கை
போதும்

நடிக்க வாய்ப்பு தேடி சென்ற இடங்களில் அட்ஜஸ்ட் செய்யச் சொன்னதால் நடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். ஒரு குழந்தை நட்சத்திரமாக எனக்கு கிடைத்த இமேஜை கெடுக்க விரும்பவில்லை. நடித்தது வரைக்கும் போதும் என்று தீர்மானித்துவிட்டேன்.

வெயிட்
எடை குறைப்பு

நான் எப்பொழுதுமே பூசினாற் போன்று தான் இருக்கிறேன். இந்நிலையில் குண்டு பெண் கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க அழைக்கிறார்கள். அதில் எனக்கு இஷ்டம் இல்லை. நடிக்க வேண்டும் என்றால் எடையை குறைக்க வேண்டும் என்று என்னிடம் கூறுகிறார்கள். இந்த துறையில் இருப்பதற்காக எடையை குறைக்க விரும்பவில்லை என்கிறார் ரிச்சா பத்ரா.

இதையும் படியுங்க :   கண்ணத்தில் பளார் விட்ட நடிகர்..!பிரபல நடிகரை இரவில் ஹோட்டல் அறைக்கு அழைத்து ஒத்திகை பார்த்த நடிகை..

Related Posts

About The Author

Add Comment