‘பிக்பாஸ் சீசன் 3’ இன் தொகுப்பாளர் யார் தொரியுமா?

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களின் மிகவும் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக உள்ளனர்.

மேலும் மக்களின் மனதை, வெல்லமும் இந்த நிகழ்ச்சி பிரபலங்களுக்கு, ஒரு பாலமாக அமைகிறது. இதன் காரணமாகேவே திரையுலகில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக தொகுப்பாளராக அறிமுகமானவர் உலகநாயகன் கமல்ஹாசன். முதல் சீசனில் தொகுப்பாளராக பட்டையைக் கிளப்பினார். இதனால் நடிப்பு மட்டுமின்றி இவருடைய தொகுப்பிற்கும் பல ரசிகர்கள் உருவாகினர்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் இவரே தொகுப்பாளராக இருந்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி, ஆரம்பத்திலிருந்தே போர் அடித்தாலும், கமல்ஹாசன் வரும் இரண்டு நாட்களில் மட்டும் டி.ஆர்.பியை அள்ளியது.

இந்நிலையில் மூன்றாவது சீசனுக்காக தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்களிடம் நிகழ்ச்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஜூன் மாதம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் அரசியலில் கால் பதித்து விட்டதால், சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியையும் இவர்தான் தொகுத்து வழங்க உள்ளதாக நிகழ்ச்சி கூறப்படுகிறது.

இதையும் படியுங்க :   பிரபல இளம் நடிகைக்கு நடந்த விபரீத சம்பவம்!

Related Posts

About The Author

Add Comment