கங்கனாவை செருப்பால் அடித்ததால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள அக்கா!…

சினிமாவுலகில் எந்த பின்புலமும் இன்றி திரைத்துறையில் நுழைந்த நடிகை கங்கனா ரனாவத் இன்று அதிகம் சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார்.

காதல் , கிசு கிசு , சக நடிகர்களை விமர்சிப்பது என அவ்வப்போது பிரச்சனையில் சிக்கிக் கொள்வார் கங்கனா.

‘தாம் தூம் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமான நடிகை கங்கனா தமிழில் பெரிதாக பேசபடவில்லை என்றாலும் இந்தி திரையுலகில் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.

தொடர்ச்சியாக தான் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் ‘கல்லிபாய்’ திரைப்படத்தில் அலியாபத்தின் நடிப்பு படு மோசமாக இருக்கிறது என்று கங்கனா கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

அலியாபட் மகேஷ் பட் மகள் என்பதால் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கங்கனா மோசமாக விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்போது கங்கனாவின் அக்கா ரங்கோலி, மகேஷ் பட் குடும்பத்தை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது தோஹா (Dhokha) என்ற படத்தில் கங்கனா நடிக்க மறுத்ததற்கு மகேஷ் பட் அவரை மோசமாக திட்டியதோடு செருப்பை அவர் மீது வீசினார்.

மேலும் கங்கனா நடித்த படத்தையே பார்க்கவிடாமல் துரத்தினார். அதனால் அந்த இரவு முழுவதும் அவள் அழுதுகொண்டே இருந்தால் அப்போது கங்கனாவுக்கு 19 வயது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்க :   சரவணன் மீனாட்சி நடிகை ஓபன்டாக்! என் கணவரிடம் அந்த கெட்டபழக்கம் இருக்கு

Related Posts

About The Author

Add Comment