கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது!

கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim என்ற நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இன்று காலை முதல் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 207 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன், 400 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஏழு பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   தமிழர்களை மிரட்டிய பிரிகேடியரின் வைரலாகும் மற்றுமொரு காணொளி

Related Posts

About The Author

Add Comment