வன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம்…

வன்னி மாவட்ட வீட்டுத்திட்டங்களில் மக்கள் கவலைக்கிடம் – பிரபா கணேசன்

வன்னி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் வீட்டுத்திட்டங்கள் அவசர அவசரமாக இடம்பெற்று வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கடைசி வருடங்களில் மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்குவதற்கான போலி நடைமுறைகளை அமைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களை திசை திருப்ப நினைக்கின்றனர் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது,

கடந்த நான்கு வருடங்களாக எவ்விதமான வீட்டுத்திட்டங்களையும் முன்னெடுக்காமல் இன்று அவசரஅவசரமாக வீட்டுத்திட்டங்களுக்கு வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், மஸ்தான் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் போலியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இவர்களால் ஒரு போதும் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்க முடியாது. இவர்கள் நினைத்திருந்தால் கடந்த நான்கு வருடங்களில் பல வீட்டுத்திட்டங்களை முன்னெடுத்திருக்கலாம். இருப்பினும் இவ்வீட்டுத்திட்டத்திற்கான முழுமையான நிதி இன்னும் ஆறு மாதத்தில் மாற்றம் அடையும். எதிர்வரும் அரசாங்கத்தினால் தான் முழுமையான முறையிலே முன்னெடுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியும். இவர்களில் இந்த அவசர செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொண்டு பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அமையப்போகும் அரசாங்கத்தின் ஊடாக குறைந்தபட்சம் பதினைந்து இலட்ச ரூபாவை அரசாங்கத்தின் ஊடாக நான் பெற்றுக் கொடுப்பேன்.

இன்று கம்பெரலிய ஊடாக அவசர அவசரமாக சரியான முறையில் பாதைகள் போடப்படுகின்றது. இதனை செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு போதும் எதிர்வரும் அரசாங்கம் நிதியினை ஒதுக்கப்போவதில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே இன்றைய நிலைப்பாடாக இருக்கின்றது.

கடந்த அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்திகளை வன்னி மாவட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நடைபெறும் அபிவிருத்திகள் சரியான முறையில் நடைபெறும் என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றனது. எமது மக்கள் இன்னும் பொறுமையுடன் ஆறு மாதங்கள் காத்திருப்பார்களேயானால் அவர்களுக்கான முழுமையான பதினைந்து இலட்ச ரூபாய் வீட்டுத் திட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். அது மட்டுமின்றி பாதைகள் தரமான முறையிலே செப்பணிடுவதற்கு ஆவண செய்வேன். இன்று கம்பெரலிய திட்டத்தின் ஊடாக இடம்பெறும் திட்டத்தில் பாரிய ஊழல் இடம்பெற்று தரமற்ற பாதைகள் இடம்பெறுவதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

இதனை தகர்த்து சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நேர்மையான ஊழலற்ற முறையிலே நான் வன்னி மாவட்ட மக்களுக்கு சேவையினை ஆற்ற தயார்படுத்தியுள்ளேன். வன்னி மாவட்ட மக்கள் எனது செய்தியினை மனதில் கொண்டு ஜனநாயக மக்கள் காங்கிரஸின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அதே போல் எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர்கள் வன்னி மாவட்ட அனைத்து பிரதேசத்திற்கும் சென்று மக்களை சந்தித்து மக்கள் குறைகளை கேட்டுக் கொண்டிருககின்றார்கள். இவர்களின் ஊடாக எனது நேரடி தொடர்பின் ஊடாக எதிர்கால வன்னி மாவட்ட மக்களின் அனைத்து பாதை, வீட்டுத்திட்டம், பாடசாலை அபிவிருத்தி, சுகாதார பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு, சமுர்த்தி பிரச்சினை, பெண் தலைமைத்துவ உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி, புணர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகளின் தேவை உட்பட அனைத்து விடயங்களுக்கும் எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் முழுமையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்.

வன்னி மாவட்ட மக்கள் முழுமையான முறையிலே இன்று எங்களை புரிந்து கொண்டிருக்கின்றார்கள். வவுனியா மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம் அனைத்து மக்களும் இன்று எம்முடன் கைகோர்த்து நிற்கின்றார்கள். அவர்களுக்கான நிலையான அபிவிருத்தியினை முன்னெடுப்பதில் நாம் திடமாக இருக்கின்றோம். ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமின்றி மாற்று இனத்திற்கு வாக்களிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்த்திருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. அதுவே எனது வெற்றியல்ல. எமது மக்களின் வெற்றி என்று அவர் தெரிவித்தார்.

 

ஐனநாயக மக்கள் காங்கிரஸ்

ஊடகத்துறை

இதையும் படியுங்க :   கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி செல்லும் அபாயம்

Related Posts

About The Author

Add Comment