இலவச விசா நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வருவதாக சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி

இந்தியா சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கான இலவச விசா நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வருவதாக சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கஅமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

“கடந்த 21 ஆம் திகதி சம்பவத்திற்கு பின்னர் இரத்து செய்யப்பட்ட இலங்கைக்கான பயணிகளின் விமான பதிவு மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் 41க்கு மேற்பட்ட விமான சேவைகள் மீண்டும் சுற்றுலா பயண சேவைகளை மேற்கொள்ள உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 3700 சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளனர். இந்த வருடத்திற்குள் ஏற்கனவே திட்டமிட்டவாறு 2.5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு உள்வாங்கும் இலக்கு எட்டப்படும்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படியுங்க :   சீனி எனக் கூறி கடத்தப்பட்ட பெருந் தொகை போதைப் பொருள் மீட்பு

Related Posts

About The Author

Add Comment