அதிர்ச்சி சம்பவம் கப்பலில் ஜன்னலோரம் விளையாடிய குழந்தை தவறி விழுந்து பலி

அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற வல்பரைசோ. இப்பகுதியில் வசிப்பவர் சால்வேட்டர் அனெல்லோ. இவர் விடுமுறையை ஒட்டி தனது குடும்பத்தினருடன் புகழ்பெற்ற ராயல் கரீபியன் என்ற சொகுசுக் கப்பலில் சுற்றுலா பயணம் செய்துள்ளார்.

இந்த கப்பலில் அவர் பயணம் செய்த போது, உள்ளுக்குள் , சால்வேட்டர் தனது பேரக்குழந்தை வேகனுடன் (1 வயது ) விளையாடிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பின்னர் தீடிரென்று சல்வெட்டர் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து பரிதாமாக இறந்தது.
அதாவது சால்வேட்டர் கப்பலில் 11வது தளத்தில் இருந்த ஜன்னலோரத்தில் பேரக்குழந்தையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தால் கையில் பேலன்ஸ் கிடைக்காமல் கீழே விழுந்துள்ளது. குழந்தை கீழே விழுந்ததும் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப்போய் நின்றுள்ளார் சால்வேட்டர்.

இந்நிலையில் கப்பலில் உற்சாகமாக பயணம் மேற்கொண்டவர்களுக்கு குழந்தை வேகண்டின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது குழந்தையிம் மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க :   அமெரிக்க வீரர் டைசன் கேயின் மகள் சுட்டுக் கொலை!

Related Posts

About The Author

Add Comment