ஹெல்மெட்டுக்குள் வெடித்து சிதறிய செல்போன்…

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது ஹெல்மெட்டுக்குள் வைத்து செல்போன் பேசிய போது திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார்.

கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி அருகே புலியரசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் விவோ செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த அவருக்கு போன் வந்துள்ளது.

இதையடுத்து, செல்போனை ஹெல்மெட்டுக்கள் வைத்துக்கொண்டு பேசியவாறு சென்றுள்ளார்.

அப்போது செல்போன் திடீரென வெடித்துள்ளது. இதில், காது, கன்னம், கழுத்தில் படுகாயம் அடைந்து சாலையில் கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே அங்கு குவிந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க :   மயங்கி விழும் வரை அடிக்க சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஊரார் – வீடியோ

Related Posts

About The Author

Add Comment