மாட்டிக் கொண்ட மீரா ‘நீ லூஸா இல்ல லூஸு மாதிரி நடிக்கிறியா’

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் மூன்று ப்ரோமோக்களை வெளியிடுவார்கள். அதன்படி இன்றைய ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Tamil 3: முகின் ராவுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன அபிராமி!

முதல் ப்ரோமோவில் ‘டிங் டிங் டிங்’ என்ற டாஸ்க் அறிவிப்பு வந்திருப்பதை சேரன் வாசிக்கிறார். அங்கு நிறைய சின்ன சின்ன கடிகாரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. மீரா மிதுனும், சாண்டியும் அதில் கலந்துக் கொள்கிறார்கள். அப்போது நேரம் எப்படி வேஸ்ட் ஆனது என்பதைப் பற்றி கவின் சொல்லிக் கொண்டிருக்கிறார்.


அதற்கு மீரா, “அதெப்படி எல்லாரும் சேர்ந்து என் சைடுல தான் தப்பு இருக்கும்ன்னு எல்லாருமே கணிக்கிறீங்க” என்கிறார். “நான் ஒரு வேள உன்ன ஹர்ட் பண்ணிருந்தா, 100 சதவீதம் அப்படி பண்ணல, ஏன்னா நா சிரிச்சிக்கிட்டே தான் சொன்னேன்” என அதற்கு பதிலளிக்கிறார் கவின். “சும்மாவே எது சொன்னாலும் சொல்லிட்டு சாரி கேட்டா?, அது ஹர்ட் ஆனது ஆனது தான்” எனக் கூறுகிறார் மீரா.


இரண்டாவது ப்ரோமோவில், “பாத்ரூம் வாஷ் பண்ணிட்டு வர்றது என்னால முடில. தண்ணி ஒத்துக்க மாட்டேங்குது. சாக்‌ஷி எனக்கு அத மட்டும் மாத்தி குடுடா ப்ளீஸ்” என்கிறார் மோகன் வைத்யா. அதை சாக்‌ஷி ரேஷ்மாவிடம் சொல்கிறார். அது கம்மி வேலை தானே என அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். இது வைத்யாவுக்கு தெரிய வர, ‘சரி சரின்னு மண்டைய ஆட்டிட்டு இங்க வந்து ஏன் பின்னாடி பேசுற. எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் பேசு’ என கோபமாகிறார்.


மூன்றாவதாக வந்துள்ள ப்ரோமோவில், சாக்‌ஷி மீராவிடம் ஏதோ ஒரு விஷயம் குறித்து கேட்கிறார். அதற்கு மீரா சரியாக பதில் சொல்லாமல் தடுமாற, ‘நீ லூஸா இல்ல லூஸு மாதிரி நடிக்கிறியா’ என கோபமாகிறார் சாக்‌ஷி.

இதையும் படியுங்க :   இரவு பார்ட்டிகளில் கற்பை இழக்கும் நடிகைகள்..! எல்லாம் இழந்த பிறகு என்ன நடக்கும்…!!

Related Posts

About The Author

Add Comment