யார் தெரியுமா மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முகாமையாளர் ?

மட்டக்களப்பு பகுதியில் 16 வயது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நுண்கடன் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, களுவாங்கேணி பகுதியில் வசிக்கும் 16 வயதான குறித்த யுவதி கடந்த வருடம் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இயங்கிவரும் நுண்கடன் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவதியை அந்த நிறுவனத்தின் முகாமையாளர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவதி குழந்தையை பிரசவித்தார்.

யுவதியும் குழந்தையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த யுவதி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக நிதிநிறுவனத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க :   எவன்காட் கப்பலின் உக்ரையின் நாட்டு தலைவர் கைது..

Related Posts

About The Author

Add Comment