நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் – முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன்

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்
– முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன்

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்ட பௌத்த பிக்குவின் உடல் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சியின் கருத்து என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதே நேரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதையும் தெரியப்படுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது,

இன்று நாட்டில் நிலவும் இன மோதல்களை தடுத்து நிறுத்தக்கூடிய தலைமைகள் இல்லை. மாறாக பௌத்த பிக்கு தன்னிச்சையாக செயல்படும் பொழுது அவரை கைது செய்து சட்டத்தை நிலைநிறுத்த முடியாத நிலையில் இன்றைய மைத்திரி ரணில் அரசாங்கம் இருக்கின்றது. இவர்களுக்கான ஆதரவு வழங்கியிருக்கும் மக்கள் கதி கலங்கி போயிருக்கின்றார்கள். பௌத்த பிக்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அவர்களின் அட்டகாசத்தை அடக்ககூடிய தலைவரே இன்று தேவைப்பட்டுள்ளது.

இந்நாட்டில் எழும் இனவாத சிந்தனைக்கு எதிராக நாம் போராடி வருகின்றோம். இருப்பினும் கூட நாம் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கின்றோம். வெறுமனே முதிர்ச்சியற்ற நிலையில் செயல்பட தயாராக இல்லை. எமது அமைப்பாளர்கள் சரியான நேரத்தில் வவுனியா வெடுக்கு நாரி சிவன் கோவில் மலைக்கு செல்வதற்கு ஏணியை சாத்தினார்கள். இதுவே இன்றைய தேவையாக இருக்கின்றது. இப்படியான நடைமுறை சம்பந்தப்பட்ட விடயங்கள் இடம்பெற வேண்டும். அதை விடுத்து அறிக்கை அரசியல் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது. எமது மதத்தை இழிவு படுத்தியது மட்டுமின்றி நீதி மன்ற தீர்ப்பையும் இழிவு படுத்திய ஞானசார தேரருக்கு மீண்டும் சிறைவாசம் செல்வதற்கான ஏற்பாடுகளை சட்டரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் செய்ய வேண்டும்.

ஊடகப்பிரிவு

இதையும் படியுங்க :   மின்தடை தொடர்பாக விசாரிப்பதற்கு விசேட குழு

Related Posts

About The Author

Add Comment