நகை கடை கொள்ளையில்’என்னை சாகடித்தாலும் வேற செய்தியில்லை’- விசாரணையில் திரும் திரும்ப சொல்லும் மணிகண்டன்

திருச்சி நகை கடை கொள்ளையில் ஈடுபட்டதாக நகையோடு பிடிபட்டிருக்கும் மணிகண்டனிடமிருந்து இதுவரை எந்த ஒரு செய்தியையும் வாங்கமுடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் விசாரணை காவலர்கள்.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த இரண்டாம் தேதி சுவற்றை ஓட்டையிட்டு 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தனர் கொள்ளையர்கள். எந்த துப்பும் கிடைக்காத கையறுநிலையில் காவல்துறையின் உயர் அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களை டைட் செய்து வாகனசோதனை நடத்த உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் திருவாரூர் பைபாஸ் சாலை கமலாம்பாள் நகர் அருகே டவுன் காவல்துறை உதவி ஆய்வாளர் பாரத நேரு தலைமையிலான போலீசார் வாகனசோதனை செய்தனர்.

அப்போது ஸ்பெளண்டர் பிளஸ் வண்டியில் மணிகண்டன் ஓட்டிவர சுரேஷ் பின்னால் பையோடு உட்கார்ந்து வந்தான். வாகனசோதனையில் இருந்த நேருவை பார்த்ததும் சுரேஷ் மட்டும் குதித்து தப்பிவிட்டான். போலீஸாரிடம் மணிகண்டன் மட்டும் சிக்கினான், சுரேஷ் ஆற்றில் குதித்து தப்பித்து அவனது வீடு இருக்கும் சீராத்தோப்புக்கு சென்று அவனது மனைவியையும் அழைத்துக்கொண்டு தப்பிவிட்டான்.

போலிஸிடம் சிக்கிய மணிகண்டனோ மடப்புரத்தை சேர்ந்தவன். அதிமுக 17 வது வார்டு அவைத் தலைவரான இளங்கோவனின் மகன்தான் மணிகண்டன். அதிமுகவிலிருந்து சமீப காலத்தில் டிடிவிதினகரன் அணிக்கும், அதன்பிறகு திவாகரன் அணியான அண்ணா திராவிடர் கழகத்திற்கும் மாறி திருவாரூர் நகர பொருளாளராக இருந்துள்ளான். பெயிண்டிங் வேலை செய்வதுதான் அவனது தொழில். மணிகண்டனின் வீட்டை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சண்டையில் கொளுத்தி விட்டுவிட்டார் அதிலிருந்து மிக சிரமத்திற்கு ஆளானவனுக்கு ஆறுதலாக இருந்தவன் சுரேஷ். திருச்சி நகை கொள்ளையில் மூளையாக இருந்த முருகனின் அக்கா மகனான சுரேஷுக்கும் மணிகண்டனுக்கும் நட்பை உருவாக்கிக் கொடுத்தது பால்பாண்டி. பால்பாண்டியோ முருகன் அடித்துவரும் நகைகளை நாகை தாஸ் என்கிற பத்தரிடம் கொண்டு சென்று உருக்கி விற்றுக்கொடுப்பவன். சில மாதங்களுக்கு முன்பு பால்பாண்டி இறந்துவிட்டான் அவன் இறந்த பிறகு நகையை உருக்கி விற்றுக்கொடுக்கும் வேலையை மணிகண்டன் செய்திருக்கிறான். நகையை உருக்கிக்கொடுக்கும் பத்தர் தாஸ் வேளாங்கண்ணி மாதாகோவில் நகைகளை ஏலத்தில் எடுத்து விற்றுக்கொடுப்பவன். மணிகண்டன் பிடிபட்ட செய்தி தெரிந்துகொண்ட தாஸ் வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டான்.

இந்த நிலையில் காவல்துறையிடம் சிக்கிய மணிகண்டனை திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வைத்து விசாரித்தனர். அவரோடு முருகனின் அக்காவும் சுரேஷின் தாயாருமான கனகவள்ளி, உள்ளிட்ட உறவுக்காரர்கள் நன்பர்கள் என 8 பேரை தூக்கிவந்து விசாரித்தனர். எந்த செய்தியும் கிடைக்கவில்லை, தனிஅறையில் ரகசிய கேமரா பொருத்தி மணிகண்டனையும், சுரேஷின் மற்றொரு நன்பனான குணாவையும் அடைத்து அவர்கள் ஏதாவது பேசுகிறார்களா என கவனித்தனர், எதுவும் நடக்கவில்லை, அதேபோல் மணிகண்டனையும், கனகவள்ளியையும் அடைத்துவைத்து விசாரித்தனர் அதிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

திருவாரூர் ஆயுதப்படை மைதானம் அழுவதும் திருச்சி காவலர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இருந்தும் மணிகண்டனிடம் வந்த ஒரே பதில், ” சுரேஷ் என்னோட நண்பன், தஞ்சாவூரிலிருந்து வந்துக்கிட்டு இருக்கேன், நீடாமங்கலத்தில் என்னை பிக்கப் செய்துகொள் என்றுதான் சொன்னான். நானும் அந்த வேலையை மட்டும் தான் செய்தேன், மற்றபடி எனக்கு ஒன்றும் தெரியாது என்னை சாகடித்தாலும் என்னிடம் வேற செய்தி இல்லை. என்று தொடர்ந்து மறுத்து வருகிறான்.

வேறுவழியில்லாமல் காவல்துறையினர் கையை பிசைந்துகொண்டு மீண்டும் திருச்சிக்கு சென்றிருக்கின்றனர்.

இது குறித்து மணிகண்டன் நட்புவட்டத்தில் விசாரித்தோம், ” காவல்துறையின் பிடியில் இருக்கும் மணிகண்டன், சுரேஷ் இருக்கும் இடத்தையோ முருகன் இருக்கும் இடத்தையோ காட்டிக் கொடுத்துவிட்டால் முருகனின் ஆதரவாளர்கள் மணிகண்டனை உயிரோடு விடமாட்டார்கள். அது மணிகண்டனுக்கு நல்லாவே தெரியும், அதனால் காவல்துறை அடித்துக்கொன்றாலும் கூட பரவாயில்லை, முருகன் மூலமோ, நண்பன் சுரேஷ் மூலமோ தனது குடும்பத்திற்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவன் எதையும் காட்டிக் கொடுக்க மறுக்கிறான். அதோடு முருகனையும், சுரேஷையும் பிடித்து விட்டதாகவும் அவர்களை வெளியில் காட்டாமல் ரகசிய விசாரணையில் வைத்திருப்பதாகவும் தற்போது செய்திகள் வருகிறது.” என்கிறார்கள் விவரமாக.

இதையும் படியுங்க :   திருமணம் முடிந்த 3 மாதத்தில் அம்பலமான காதலனின் உண்மை முகம்!!

Related Posts

About The Author

Add Comment