மாணவியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய வாலிபர். ஒரு வருடத்துக்கு பின் கைது!!

பிளஸ்-2 மாணவியை காதலித்து பலவந்தமாக கற்பழித்து கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காலனி தெருவை சேர்ந்த திவ்யா 12-ம் வகுப்பு படித்து வந்தார். பந்தநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குமார் மகன் கமலேஷ் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மாணவி திவ்யாவை குமார் பலவந்தமாக கற்பழித்ததாக சொல்லப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.

மகள் கர்ப்பமாக உள்ள விஷயம் தெரிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், கர்ப்பமாக்கிய கமலேஷ் சந்தித்த பெற்றோர் தனது மகளை கல்யாணம் செய்து கொள்ள கேட்டு கெஞ்சி உள்ளனர்.

ஆனால் கமலேஷ் சரியான பதில் சொல்லாமல் திவ்யாவை ஏமாற்ற நினைத்துள்ளார். இதனை அடுத்து பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த ஒரு வருடமாக கமலேசை போலீசார் தேடிவந்த நிலையில் பந்த நல்லூர் இன்ஸ்பெக்டர் சுகுணா, குமாரை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்

இதையும் படியுங்க :   பள்ளி ஆசிரியைகள் செய்த மோசமான காரியத்தால் உயிரை விட்ட பள்ளி மாணவி

Related Posts

About The Author

Add Comment