மேடையிலேயே கலக்கிய கஸ்தூரி.. வயசே ஆகல பாஸ் இவங்களுக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் விழாவில் கஸ்தூரி நடனம் ஆடியது பெரிய வைரலானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் விழா இன்று நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக, சுவாரசியமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முகேன் ராவிற்கு வின்னர் டைட்டில் வழங்கப்பட்டது. அதேபோல் சாண்டிக்கு இந்த போட்டியில் ரன்னர் அப் டைட்டில் வழங்கப்பட்டது.

கலை
நடனம்
இந்த நிகழ்ச்சியில் நிறைய பாட்டு, டான்ஸ் என்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கஸ்தூரி நடனம் ஆடியது பலரையும் கவர்ந்தது. முதல்முறை டிவி நிகழ்ச்சி ஒன்றில் இப்படி கஸ்தூரி நடனம் ஆடி இருக்கிறார்.

ஆடினார்
என்ன ஆடினார்

இதில் அந்தியில வானம் பாடலுக்கு முதலில் கஸ்தூரி நடனம் ஆடினார்.

பிரபு, கஸ்தூரி நடித்த சின்னவர் படத்தில்தான் இந்த பாடலும் இடம்பெற்று இருக்கும். 1992ல் இந்த பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மீண்டும்
என்ன மீண்டும்

இந்த நிலையில் 27 வருடங்கள் கழித்து இந்த பாடலுக்கு மீண்டும் கஸ்தூரி நடனம் ஆடி இருக்கிறார். ஜாலியாக, டென்ஷன் இல்லாமல் கஸ்தூரி இந்த பாடலுக்கு நடனம் ஆடினார். இவருக்கு கொஞ்சம் கூட வயதே ஆகவில்லை என்றுதான் கூற வேண்டும்.

பாடல்
இன்னொரு பாடல்

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் எங்க வீட்டு குத்து விளக்கே பாட்டிற்கும் அவர் நடனம் ஆடினார். அதன்பின் ஒரு குச்சி, ஒரு குல்பி பாடலுக்கும் கஸ்தூரி நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   அறிவியல் உண்மைகள்! திருஷ்டி போக்கும் கல் உப்பு .

Related Posts

About The Author

Add Comment