தெறிக்க விடும் காரணம்! போராடி பூட்டை உடைத்த திருடன்! கதவை திறந்த பிறகு தலையில் அடித்துக் கொண்டு திரும்பிய பரிதாபம்!

திருட சென்ற இடத்தில் சிசிடிவி கேமரா இருந்ததால் திருடன் திருட்டு முயற்சியை கைவிட்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சிட்லபாக்கம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட ஜெயா நகர் என்னுமிடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய வீட்டின் இரும்பு கேட்டை உடைப்பதற்காக திருடன் மிகப்பெரிய ராடை உபயோகப்படுத்துகிறான். நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் அந்த வீட்டின் வாயிலில் சிசிடிவி கேமரா இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளான்.

அதன்பின்னர் திருடன் அங்கிருந்து வீட்டு கதவை மூடி விட்டு தப்பி சென்றுவிட்டார். வெளியூருக்கு சென்று திரும்பிய ஸ்ரீதர் தன் வீட்டு கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ந்தார். உடனடியாக சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது மேல் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் நிகழ்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது சிட்லபாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க :   துறைமுக ஊழியர்களின் போராட்டம் முடிவு

Related Posts

About The Author

Add Comment