செம்ம டான்ஸ் ஆடிய லாஸ்லியா சாண்டியின் ஸ்டுடியோவில்!

கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரால் விமர்சிக்கப்பட்டும் கவரப்பட்டும் பிரபலமானவர் லாஸ்லியா.பிக்பாஸ் போட்டி முடிவடைந்த பின் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். சாண்டி வீட்டில் வைத்த விருந்தில் கவின், தர்ஷன், அபிராமி, முகென் ராவ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். சாண்டி வீட்டில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம் போட்ட வீடியோக்களும் வெளியானது.

அதனை தொடர்ந்து சாண்டி நடத்தி வரும் நடன பள்ளிக்கு சென்ற லாஸ்லியா அங்கிருந்த மாணவர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு உள்ளார்.

இதையும் படியுங்க :   பிரபலங்கள் பங்கேற்ற மலேசியா நட்சத்திர விழாவுக்கு பின்னால், அதிர்ச்சியான தகவல்கள்!

Related Posts

About The Author

Add Comment