ரஷ்யாவில் தன்னைவிட அழகாக இருந்ததால் தங்கையை குத்திக் கொலை செய்த கொடூர அக்கா!

ரஷ்யாவில் தன்னைவிட தனது சகோதரி அழகாக இருந்ததால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த எலிசவேடா மற்றும் ஸ்டெனிபானியா ஆகியோர் சகோதரிகள். பெற்றோர் இல்லாத இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தனர். பின் மாடலிங் துறையில் நுழைந்தனர்.

எலிசவேடாவை விட ஸ்டெனிபானியா மிகவும் அழகாக இருந்ததால் பொறாமை பட்ட அவர், ஸ்டெனிபானியா உடலில் 189 முறை கத்தியால் குத்தி நிர்வாணமாக்கி கண்களை வெளியில் எடுத்து, வலது காதை அறுத்து கொலை செய்தார். இதில் ஸ்டெனிபானியா துடிதுடித்து இறந்தார்.

ஸ்டெனிபானியா கொலைச்செய்யப்பட்ட நேரத்தில் அவருடைய காதலன் தற்செயலாக வந்துள்ளார். வீட்டில் ஸ்டெனிபானியா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், எலிசவேடாவை காவல்துறையினர் ஒப்படைத்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி எலிசவேடா மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வெளிவந்தவுடன் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படியுங்க :   விமானத்தில் குசு விட்ட நபர்: அவசரமாக தரையிறக்கிய விமானி

Related Posts

About The Author

Add Comment