கலங்க வைக்கும் சம்பவம்! சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் தடைகள்….

குறிப்பாக நிலத்தின் கீழ் உள்ள பாறைகளில் துளையிடுவது மிகுந்த கடினமாக உள்ளது. இதற்காக இரண்டாவது ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பணிகள் தொடரப்பட்ட போதும்,

எதிர்பார்த்த வகையில் துளையிட முடியவில்லை. இதேவேளை குழந்தையின் சுவாசம், அசைவு, என்பனவற்றில் நேற்று காலை முதல் திருப்தியான தரவுகள் இல்லை. 63 மணிநேரத்துக்கும் அதிகமாக, தொடரும் இப்பணியில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து? இறுதி முடிவு எடுக்க வேண்டிய நிலையிலுள்ளளோம். இது தொடர்பில் பெற்றோர்கள், அதிகாரிகள், தரப்பில் பேச்சுவார்த்தைகள் செய்து வருகின்றோம். ” எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

திருச்சி நடுக்காட்டுப்பட்டி உலகறிந்த பெயராக மாற்றிவிட்ட இந்த அனர்த்தம். உலகெங்கனுமிருக்கின்ற மக்கள் இந்த மீட்புப் பணிமீதான கவனத்தைக் கொண்டுள்ள நிலையில் இப்பணியில் பல தடைகள் ஏற்பட்டு வருகின்றன. துளையிடும் பணியில், பாறைகள் நிறைந்த பகுதி என்பது பெரும் சவாலாக உள்ளது. பாறைகள் துளையிடப்பட்டுவிட்டால் கீழே கரிசல் மண் தென்பட வாய்ப்பு ள்ளது எனக் கூறப்படும் தரவுகள் அடிப்படையில் இப்பணி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். இதுவரை 40 அடி அளவில் தோண்டப்பட்டுள்ளதை வைத்துக் கணக்கீடுகையில், மிகுதியுள்ள பகுதியைத் தோண்டுவதற்கு மேலும் 12 மணிநேரத்திற்கும் அதிகமாகலாம் எனவும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.

இதையும் படியுங்க :   சுவிஸ் தூதரக அதிகாரி சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு சமூக வலைத்தளங்களில் தாக்குதல்

Related Posts

About The Author

Add Comment