உங்களுக்கு அடிக்கடி கோபம் வருகிறதா? முதலில் இதை கவனியுங்கள்.!!

அதிகமாக கோபப்படுபவரா நீங்கள்?

எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறதா?

காரணமே இல்லாமல் கோபம் வருகிறதா?

கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லையா?

கோபத்தால் கிடைத்ததையெல்லாம் தூக்கிப்போட்டு உடைக்கிறீர்களா?

அப்படியெனில் நீங்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அனைவருக்கும் கோபம் வருவது என்பது இயற்கையே. கோபப்படாமல் இருப்பவர்களை பார்க்கவே முடியாது. கோபப்படாமல் யாராலும் இருக்கவும் முடியாது. ஏதாவது ஒரு சிறிய விஷயத்திற்காவது கோபம் வரும். ஆனால், அளவுக்கு அதிகமாக கோபப்படுவது சரியா?

பேச்சில் நிதானம் :

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

எவற்றை காக்காவிட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்.
ஒருமுறை சொற்கள் உதிர்த்து விட்டால், அவற்றை திரும்ப எடுக்க முடியாது.

சொந்த பந்தங்களையும் கோபத்தால் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டால் உறவுகள் உடைந்து போகவும் வழிவகுக்கும்.

எனவே, கோபப்படும்போது அதிகபட்சம் பேசாமல் நாவடக்கத்துடன் இருப்பது நல்லது.

அதிக கோபம் உடலில் வராத வியாதிகளைக் கூட வரவழைத்துவிடும்.

சுயபரிசோதனை… யோசியுங்கள் :

ஏன் கோபப்படுகிறோம்?

யாருக்காக கோபப்படுகிறோம்?

எதற்காக கோபப்படுகிறோம்?

கோபம் வரும்போது என்ன செய்கிறோம்?

அதிகமான கோபத்தால் சொந்த பந்தங்கள் அகன்று போகிறார்களா?

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கோபம் நம்மை பாதிக்கிறதா?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை அறியப் பாருங்கள். இது உங்கள் கோபத்தை குறைக்க செய்யும்.

இதனை தவிர்த்திடுங்கள் :

வேகமாக நடப்பது

கதவை வேகமாக இழுத்து மூடுவது

கிடைத்ததை தூக்கிப்போட்டு மிதிப்பது

எதையாவது உடைப்பது

மேல்நோக்கி பார்த்து முணங்குவது

நகங்களைக் கடிப்பது

பற்களைக் கடிப்பது

போன்ற செயல்பாடுகள் நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டும். எனவே இதனை செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

கோபம் வந்து விட்டால் உடனே பத்து வரை எண்ணிக் கொண்டு வரலாம்.

கோபமாக இருக்கும்போது ஏதேனும் நகைச்சுவையை பார்க்கலாம்.

மனதை ரிலாக்ஸ் செய்யும் வேலைகளில் ஈடுபடலாம்.

கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்படும்போது, வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய், தலையணையிடம் கோபத்தை காண்பிக்கலாம்.

மனதிற்கு பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம்.

தனி இடத்திற்கு சென்று, குறைந்தது பத்து நிமிடங்களாவது உட்கார்ந்துவிட்டு வாருங்கள்.

90% உங்களை கோபப்படுத்தும் விஷயத்தில் நகைச்சுவையான ஒன்று இருக்கும். அந்த நகைச்சுவையை கண்டறிய முயற்சி செய்யலாம்.

கோபம் வரும்போது கண்ணாடியில் ஒரு தடவை நம் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது.

கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள்.

தினமும் 10 நிமிடங்கள் யோகா, தியானம் செய்ய பழகி கொள்ளுங்கள்.

கோபம் வந்தால் உடலில் என்னென்ன நடக்கும்?

கைகளைக் கோர்ப்பது, பிடிப்பது

நெட்டி முறிப்பது, முறுக்குவது

உடல் சூடாகும்

வேகமாக மூச்சு விடுதல்

தலைவலி வரும்

அங்கே இங்கே நடப்பது

முகம், கண்கள் சிவப்பாகும்

எதையும் கவனிக்க முடியாமல் தவிப்பது

தோள்பட்டைகளில் இறுக்கம்

வேகமான இதயத்துடிப்பு

இதெல்லாம் உடலில் நடக்கும். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தி ஹார்மோன்களை தூண்டி உங்களது உடல்நிலையையும், மனநிலையையும் மேலும் மோசமாக்கும்.

முடிந்த வரை கோபத்தை தவிர்க்க முயலுங்கள்..

இதையும் படியுங்க :   உங்களின் முழங்கை மற்றும் முழங்கால் கருமையாக உள்ளதா? அதை நீக்க இதோ சில அற்புத வழிகள்!

Related Posts

About The Author

Add Comment