நண்பனை சுட்டது ஏன்? விஜய் பகீர்!

பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் துப்பாக்கியில் சுடப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த விஜய் சரணடைந்த நிலையில் சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் சுடப்பட்ட வழக்கில் அவரது நண்பர் விஜய்யை போலீஸார் தேடி வந்த நிலையில், விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் சரணடைந்த விஜய்யை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1
சம்பவம் குறித்து விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விஜய் கூறியதாவது, கொஞ்சம் நாளுக்கு முன் குப்பை தொட்டியில் இந்த துப்பாக்கி கிடைத்தது. அதை எடுத்து வீட்டின் பக்கத்தில் புதைத்து வைத்தேன்.

முகேஷ் வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது அந்த துப்பாக்கியை எடுத்து அவனிடம் காட்டி, அவன் நெத்தியில வெச்சு விளையாட்டுக்கு சுட பார்த்தேன். ஆனால், தெரியாமல் சுட்டுவிட்டேன்.
இதனால் பயந்துபோய் என்ன செய்வதென்று தெரியாமல் துப்பாக்கியுடனே தப்பிச்சு ஓடிவிட்டேன். அங்கிருந்து நேராக கோவளம் பீச்சுக்கு சென்று, துப்பாக்கியை கடலில் வீசிவிட்டேன் என தெரிவித்துள்ளார்

இதையும் படியுங்க :   முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய சதி திட்டம்!! இணையத்தில் தீயாக பரவும் பரபரப்பு காணொளி...

Related Posts

About The Author

Add Comment