விமான நிலையத்தில் நிகழ்ந்த பரபரப்பான சம்பவம்! அயன் பட பாணியில் தங்கத்தை கடத்திய பெண்கள்!

இலங்கையை சேர்ந்த பாத்திமா,தெரசா என்ற இரு பெண்களும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் சென்னை வந்துள்ளனர்.

அப்போது விமான நிலையத்தில் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர்களது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அந்த பெண்களிடம் காரணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் திருப்தி அடையாமல் அவரை அதிகாரிகள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அவர்களின் வயிற்றில் 40 லட்சம் மதிப்புள்ள தங்க மாத்திரை இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

இதனால் இருவரையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அதிகாரிகள் கொண்டு சென்று மாத்திரையை எடுக்க முடிவு செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்களது கார் முன்பு ஒரு கார் வந்த நின்றது. அதிலிருந்து சிலர் ஆயுதங்களுடன் வந்த அங்கு இருந்த அதிகாரிகளை அடித்து விட்டு அந்த இரண்டு பெண்களையும் அழைத்து சென்றுள்ளனர்.

இதனை அடுத்து அதிகாரிகள் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்தது பல்லாவரம் பகுதி என்பதால் அங்கு சென்று புகார் அளித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில் கடத்தப்பட்ட இரண்டு பெண்களையும் கடத்தல் ஆசாமிகள் கடத்திய இடத்திலேயே விட்டு சென்றுள்ளனர். அதனை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் எங்களை கடத்தி சென்றது யார் என தெரியவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் தங்களின் கண்களை கட்டி அழைத்து சென்று இனிமா கொடுத்து தங்கத்தை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் போலீசாருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அதாவது கடத்திய பெண்களை அழைத்து செல்லும் போது அவர்களுடன் விமான நிலைய மருத்துவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

இல்லையென்றால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைகோ அல்லது ராயப்பேட்டைக்கோ அழைத்து செல்ல வேண்டும். ஏன் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று விசாரணை நடந்து வருகின்றனர்.

இதையும் படியுங்க :   கழுகை துன்புறுத்தி கொன்ற சம்பவம் - இருவர் சிக்கினர்

Related Posts

About The Author

Add Comment