ச்சீ! என்னுடைய கார் டிரைவர் இந்த மாதிரி பண்ணுவார் என்று நான் நினைச்சு கூட பாக்கல.. !

தமிழ்சினிமாவில் வெள்ளைத்தோல் நடிகைகளுக்கு மத்தியில் நடிக்கத் தெரிந்தால் கருப்பான பெண்களாலும் சாதிக்க முடியும் என மெட்ராஸ் படத்தின் மூலம் நிரூபித்து இளைஞர்களை கொத்தாக அள்ளி சென்றவர் ரித்விகா.

அதன்பிறகு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யாரும் எதிர்பாராத வகையில் டைட்டில் பட்டத்தை வென்றார். இவர் தற்போது டுவிட்டரில் ஒரு கார் டிரைவரிடம் தான் பட்ட கஷ்டத்தை புலம்பித் தள்ளி உள்ளார்.

அவர் கூறியதாவது, உபேர் நிறுவனத்தின் காரில் தான் பாதுகாப்பற்ற முறையில் பதற்றத்துடன் பயணம் செய்ய வேண்டி இருந்ததாகவும், டிரைவர் ஜெயினுலாப்தீன் காரை மிகவும் ராஷ் முறையில் ஒட்டியதாக தெரிவித்திருந்தார்.

அந்த வண்டி எண் TN07AR4798 கொண்ட டாடா இண்டிகா கார் என்று உபேர் நிறுவனத்திடம் புகார் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த நிறுவனம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை ரித்விகாவிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு நிறுவனம் சார்பாக மன்னிப்பு கேட்பதாகவும் அறிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்க :   24 படம் எப்படி உள்ளது? படம் பார்த்தவர் கூறிய விமர்சனம்

Related Posts

About The Author

Add Comment