13 வயது சிறுவன் செய்த கண்கலங்க வைக்கும் காரியம்!! 6 குழந்தைகளுடன், ஒரே குடும்பத்தை சேர்ந்த12 பேர் கொடூரகொலை!!

மெக்சிகோ சொனோரா பகுதியைச் சேர்ந்த பெண்கள் 3 பேர் தங்களது 14 குழந்தைகளுடன் 3 வெவ்வேறு கார்களில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது கார் பேவிஸ்ப் காட்டுப்பகுதியில் வந்துகொண்டிருந்த போது அவர்களை மர்ம கும்பல் ஒன்று வழி மறித்து சரமாரியாக சுடத்தொடங்கியுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலிருந்து அவர்கள் சுதாரித்து தப்பி கொள்ளமுடியாத நிலையில் 3 பெண்களும், அவர்களின் 6 குழந்தைகளும் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில் அந்த மர்மக்கும்பல் நடத்திய கொடூர தாக்குதலிலிருந்து சாமார்த்தியமாக தப்பிய 13 வயது சிறுவன், அவருடன் 7 குழந்தைகளையும் காப்பாற்றி, அங்கிருந்த புதர் ஒன்றில் மறைத்து வைத்துள்ளான்.

அதனை தொடர்ந்து அந்த சிறுவன் காட்டுப்பகுதியிலிருந்து 6 மணி நேரம் நடந்து சென்று நகரை அடைந்து உதவி கேட்டுள்ளான். பின்னர் இதுகுறித்து தகவலளிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் சம்பவம் நடந்த அந்த காட்டுப்பகுதிக்கு விரைந்து குழந்தைகளை மீட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் போதைபொருள் கடத்தும் கும்பல்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து மெக்சிகோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைபட்டால் உங்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   கருணா அம்மானின் தயார் இயற்கை எய்தினார்

Related Posts

About The Author

Add Comment