ஓமலூர் அருகே ஏடிஎம்மில் 200 ரூபாய் எடுக்க சென்றவற்கு அடித்த அதிர்ஷ்டம்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் உள்ளது. அந்த ஏடிஎம்மில் இன்று காலை ஒருவர் பணம் எடுத்துள்ளார். அப்போது 200 ரூபாய்க்குப் பதில் 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளது. இந்த தகவல் அறிந்த மற்ற வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் அங்கு விரைந்து, யாரும் பணம் எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்

அத்துடன் ஏடிஎம் மையத்தை பூட்டிவிட்டனர்.

200 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டுக்களை வைத்ததால் இந்த கோளாறு ஏற்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். ரேக் மாறி பணத்தை வைத்த தனியார் நிறுவனமே பண இழப்பக்கு பொறுப்பு என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க :   அண்ணியுடன் கள்ளத்தொடர்பு... போட்டுதள்ளிவிட்டு 6 ஆண்டுகளாக நாடகமாடிய மனைவி..!

Related Posts

About The Author

Add Comment