சாக்கு மூட்டையில் கட்டி.. குழி தோண்டி புதைத்த மனைவி! ஓனருடன் நெருக்கம்.. கணவர் படுகொலை..

இடுக்கி: ரிசார்ட் ஓனருடன் ஏற்பட்ட நெருக்கம், கட்டின கணவனை கொன்று சாக்கு மூட்டைக்குள் கட்டி குழி தோண்டி புதைக்கும் அளவுக்கு போய்விட்டது!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கழுத்துக்குளமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி ரிஜோஷ் – லிஜி. இவருக்கு வயது 29 ஆகிறது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் ரிஜோஷ் வேலை பார்த்து வந்தார். அதற்காக ரிசார்ட்டுக்கு பக்கத்திலேயே வீடு எடுத்து வசித்து வந்தனர். அந்த நேரத்தில்தான் ரிசார்ட் ஓனருக்கும், லிஜிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருக்கமானது. வாசிம் அப்துல் காதர் என்பதுதான் ரிசார்ட் ஓனர் பெயர். வயசு 27 ஆகிறது!

இந்த நிலையில் போன 31-ம் தேதி முதல் ரிஜோஷை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

உடனே லிஜி, “திருச்சூரில் இருந்தும், கோழிக்கோட்டில் இருந்தும் எனக்கு அவர் போன் பண்ணி பேசினார். அதனால் யாரும் பயப்பட வேண்டாம், வேணும்ன்னா என் போனை செக் பண்ணி பாருங்க” என்று குடும்பத்தினரிடம் சொன்னார்.

ஆனால் லிஜியின் பேச்சை அவர்கள் நம்பாமல் திரும்பவும் போலீசுக்கு போனார்கள். அடுத்தடுத்து புகார்கள் லிஜியின் மீது வந்து கொண்டே இருந்ததால், விசாரணையும் ஆரம்பமானது. இதற்காக லிஜியிடம் விசாரிக்க வந்தபோது, ரிசார்ட் ஓனரையும் காணோம், லிஜியையும் காணோம். 2 வயது குழந்தையுடன் இவர்கள் இருவரும் மாயமாகவும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்துதான், இவர்களது உறவை கண்டுபிடித்தனர். ரிசார்ட்டை சுற்றிலும் சோதனை நடத்தினர். அப்போது, ரிசார் அருகில் மழை நீர் சேகரிப்பு தொட்டி இருந்தது.

அதன்மேல் புதிதாக மண் போட்டு நிரப்பப்பட்டும் இருந்தது. புதிதாக சிமெண்ட் போடப்பட்டதால், சந்தேகம் அடைந்து, அந்த தொட்டியை தோண்டினார்கள். ஆதற்குள் ஒரு சாக்குமூட்டை கிடக்கவும், அதை பிரித்து பார்த்தனர். அதில்தான் ரிஜோஷ் சடலமாக கிடந்தார். ரிஜோஷுக்கு மதுவில் விஷத்தை கலந்து இந்த ஜோடி கொன்றுள்ளது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் இது சம்பந்தமான விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதனால், ரிசார்ட் ஓனரின் சகோதரர், நண்பர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சமயத்தில் ஒரு வாஸ்அப் ஆடியோ சகோதரருக்கு வந்துள்ளது. ரிசார்ட் ஓனர்தான் அதை அனுப்பியிருந்தார். அதில், “ரிஜோஷ் கொலை வழக்கில் எனது சகோதரர், நண்பர்களுக்கு தொடர்பில்லை” என தெரிவித்துள்ளார். இந்த வாட்ஸ்அப் வந்த இடத்தை ஆய்வு செய்ததில், குமுளியில் சிக்னல் காட்டுகிறது. அதனால், ஒரு தனிப்படையை அமைத்து இந்த கள்ள ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

source: oneindia.com

இதையும் படியுங்க :   தேவாங்கு போல இருப்பதாக கூறியதால் சுவாதியின் வாயை குறிவைத்து வெட்டினேன் : ராம்குமார் பரபரப்பு வாக்கும...

Related Posts

About The Author

Add Comment