‘மாங்கல்யம் தந்துநானேன’ இதன் பொருள் என்ன தெரியுமா?

* ‘மாங்கல்யம் தந்துநானேன மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகேத்வம் ஜீவ சரத: சதம்’ என்ற மந்திரத்தை

* ஒவ்வொரு திருமணத்திலும் புரோகிதர் சொல்லி தாலி எடுத்து கொடுப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் புரோஹிதர் மட்டும் சொல்வதை விட மணமகன் தனது வாயால் திரும்பி சொல்வதுதான் சிறப்பு.

* இதன் பொருள் மங்களகரமான பெண்ணே எனது வாழ்வின் நோக்கம் நிறைவேறுவதற்காக அதாவது தர்ம நெறியுடன் கூடிய வாழ்க்கையை நடத்துவதற்காக திருமாங்கல்யம் கூடிய இந்த கயிற்றினை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும், நானும் இணைபிரியாது இருந்து இணைந்து சரத் ருது என்று சொல்லப்படக்கூடிய கார் காலத்தினை நூறு முறை சரஸ் சதம் சந்திக்க வேண்டும்.

அதாவது நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை மாங்கல்யம் தந்துநானேன என்று துவங்கும் என்ற மந்திரம் தெளிவாக உணர்த்துகிறது.

* இது மந்திரம் என்பதைவிட மணமகன் மணமகளுக்கு சொல்லும் உருது மொழி என்ற விதத்தில் கூட எடுத்துக்கொள்ளலாம். மொத்தத்தில் திருமண வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் வரும், போகும் அவற்றை எல்லாம் சமாளித்து தம்பதிகள் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இம்மந்திரம் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்க :   மிகவும் ஈஸியாக கருவளையங்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்!!!

Related Posts

About The Author

Add Comment