பெங்களூரில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட தங்கை… காதலியால் போதைக்கு அடியாமையான அண்ணன் வெறிச்செயல்

பெங்களூரில் தங்கையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மங்களூரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் கடந்த 8ம் திகதியன்று, தன்னுடைய 16 வயது மகள் பியோனாவை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு பியோனாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். பியோனா இறந்த பின்னரும் கூட, அவருடைய செல்போனில் இருந்து ஒரு இளைஞருக்கு தொடர்ந்து மெசஜ் சென்றிருப்பதை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு விசாரணையில், பிரான்சிஸ்க்கு 18 வயதில் சாம்சன் என்கிற மகன் இருக்கிறார். அவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த இளம்பெண்ணை 2017ம் ஆண்டு ராஜேஷ் என்பவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சாம்சன் அன்றிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வேலை எதற்கும் செல்லாமல் வீட்டிலே முடங்கியுள்ளார்.

யாரிடமும் பேசாமல் செல்போன் பயன்படுத்துவது, கஞ்சா பயன்படுத்துவதை மட்டுமே பொழுதுபோக்காக கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த பிரான்சிஸ், சாம்சனின் செல்போனை பறித்துச்சென்றுள்ளார்.

ஆனால் பியானோவிற்கு மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளார். இது சாம்சனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து பொலிஸாரின் சந்தேகம் சாம்சன் பக்கம் திரும்பியது. அவரை பின் தொடர்ந்த போது சந்தேகத்திற்குரிய இடத்திற்கு அடிக்கடி சென்றுவருவதை கவனித்த பொலிஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொலை குற்றத்தை சாம்சன் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடைபெற்ற அன்று பியானோவுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரத்தில் சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு, வீட்டிற்கு பின்புறம் 25கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்தில் புதைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் பியானோவின் ஆண் நண்பருக்கு செல்போனில் தொடர்ந்து மெசேஜ் செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் அவர் கூறிய இடத்தில் பொலிஸார் தோண்டியபோது, பியானோவின் எலும்பு எச்சங்கள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு பியானோவுடையதா என்பதை கண்டறிய அவருடைய உடல் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தல் வழக்கை கொலைக்கு மாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க :   கருட புராணத்தில் அபிராமி செய்த பாவத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?

Related Posts

About The Author

Add Comment