விசாரணையில் பகீர்.!! கேரள கள்ளக்காதல் ஜோடி மும்பையில் தற்கொலை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பையில் பன்வெல் பகுதியில் இருக்கும் தாங்கும் விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கேரளாவை சார்ந்த ஜோடி வந்து., தங்களை கணவன் – மனைவி என்று அடையாளப்படுத்தி அறையெடுத்து தங்கி இருந்துள்ளனர்.

இவர்களுடன் இரண்டு வயதுடைய பெண் குழந்தையும் இருந்த நிலையில்., நேற்று மதியம் வரை இவர்களின் அரை திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.

பின்னர் மாற்று சாவியின் மூலமாக கதவை திறந்த நிலையில்., உள்ளே இருந்த குழந்தை உட்பட மூவரும் பூச்சி மருந்து குடித்த நிலையில் பேச்சு மூச்சின்றி இருந்துள்ளனர். இதனையடுத்து இவர்களை மீட்ட காவல் துறையினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த சமயத்தில்., சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்., காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வாசிம் அப்துல் (வயது 35) மற்றும் லிஜி (வயது 28) கள்ளக்காதல் ஜோடிகள் என்பதும்., பரிதாபமாக உயிரிழந்த சிறுமி லிஜியின் இரண்டு வயது மகள் ஜோனா என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பான விசாரணையில்., கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் இருக்கும் பண்ணையில் வசித்து வரும் வாசிம் அப்துல் மேலாளராக பணியாற்றி வரும் நிலையில்., லிஜியின் கணவர் ரிஜோ பணியாற்றி வந்துள்ளார். இந்த சமயத்தில்., அப்துலிற்கும் – லிஜிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த ரிஜோஸ் இருவரையும் கண்டிக்கவே., கள்ளகாதல் ஜோடி ரிஜோஸை கொலை செய்து புதைந்துள்ளது. பின்னர் காவல் துறையினருக்கு பயந்து மும்பைக்கு வந்து விஷமருந்தி தற்கொலை செய்ய முயற்சித்தும் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க :   சவால் விடும் உதயநிதி! இனிமே நான் தான் தளபதி! நீங்க இல்ல மிஸ்டர் விஜய்!

Related Posts

About The Author

Add Comment