அடேங்கப்பா!13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ!

நடந்துமுடிந்த இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோத்தபாய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதன்படி நாடளாவிய ரீதியில் கோத்தாபய ராஜபக்ஷ 6,924,255 (52.25%) வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

நுவரெலியா, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அமோக வெற்றிபெற்றுள்ளதுடன்,

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, பதுளை, அனுதராபுரம், பொலன்னறுவை, குருணாகல் மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் கோத்தபாய அமோக வெற்றிபெற்றுள்ளார்.

இந் நிலையில் இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ நாளைய தினம் அனுராதபுரத்தில் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   ஜனாதிபதியின் ஐரோப்பா விஜயத்தின் இறுதி நாள் இன்று

Related Posts

About The Author

Add Comment