மீண்டும் பதவியேற்கிறார் மைத்திரி! நாடாளுமன்ற உறுப்பினராக

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார்.

இதன் பின்னர் சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ள உள்ளார்.

மைத்திரிபால சிறிசேன எதிர்கால அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிப்பார் என அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க :   யாழ்ப்பாணத்தில் 60 வயது காதலனிடம் நேரில் வந்து மன்னிப்பு கேட்ட பேஸ்புக் காதலி!!!

Related Posts

About The Author

Add Comment