பிரியாணி சுவையாக செய்ய வேண்டுமா.? அப்ப இத படியுங்க!

பிரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம். உப்புத் தண்ணீர் சுவையை மாற்றி விடும்.

ஆம்பூர் பிரியாணியின் தனித்துவமே கறியை மசாலாவில் வேகவிடுவது தான்.

பிரியாணியில் கொத்தமல்லி புதினாவை ரொம்ப அரைக்காமல், பொடியாக நறுக்கி போட்டால் வாசம் நன்றாக இருக்கும்.

செட்டி நாடு பிரியாணி செய்யும்போது மிளகு, தேங்காய் பால் மற்ற மசாலாக்களை எல்லாம் அரைத்து சேர்த்து அப்படியே தண்ணீர் ஊற்றி செய்யலாம்.

அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

தேங்காய், கசகசா, முந்திரி சேர்த்து அரைப்பது ஒரு வகை சுவையை தரும்.

தேங்காய் மட்டுமே அரைப்பது ஒரு வகை சுவையை தரும். தேங்காய் பாலாக சேர்ப்பது ஒரு வகை சுவையை தரும்.

சிக்கன் எலும்போடு போட்டால் ஒரு சுவை, எலும்பில்லாமல் போட்டால் ஒரு சுவை. எலும்போடு இருப்பதே அதிக சுவையை தரும்.

அரிசி போடும் முன் நீர் நன்றாக கொதிக்க வேண்டும். அரிசி முக்கால் பதமாக வேக வைப்பது அவசியம்.

இஞ்சி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கிராம்பு, முந்திரி ஆகியவற்றை விழுதாக அரைத்து சேர்த்தால் பிரியாணி மிகுந்த சுவை தரும்.

ஓவ்வொரு தடவை பிரியாணியை கிளறும் போது மூடி வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அப்போது தான் பிரியாணி சுவை மாறாமல் இருக்கும்.

இதையும் படியுங்க :   சமையல் கலை நிபுணர் மரணம்

Related Posts

About The Author

Add Comment