63 நாட்களுக்குத் தேவையான தாய் பாலை தானம் செய்த அமெரிக்க தாய்

அமெரிக்காவின் விஸ்கொன்சின் என்ற மாகாணத்தை சேர்ந்தவர் தாய் சியரா ஸ்ட்ராங்பீல்ட் என்பவர் கர்ப்பமாக இருந்த போது 20 வாரங்களில் மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொண்டார்.

அப்போது தான் சியரா வயிற்றில் இருந்த குழந்தைக்கு, ட்ரிசோமி 18 என்ற அரிய வகை மரபணு நோய் இருப்பதை கண்டறிந்து கூறியுள்ளனர்.

இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய் என்றும், இதனால், குழந்தை பிறந்தாலும் நீண்ட நாள் வாழ முடியாது. எனவே கருவை கலைத்துவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவர்கள் அறிவுரைக்கு மறுப்பு தெரிவித்த சியராவிற்கு கடந்த செப்டம்பர் மாதம் குறைபிரசவமாக 63 நாட்களிக்கு முன்பே ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு சிறிது நேரத்திலேயே சாமுவேல் லீ என சியரா பெயரிட்டார்.

ஆனால், குழந்தை பிறந்த 3 மணி நேரத்திலேயே இறந்துவிட்டது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட சயிரா மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். ஆனாலும், தன் குழந்தைக்கு இல்லாவிட்டாலும் மற்ற குழந்தைகளுக்கு உதவ ‘சாமுவேல் லீ’ நினைவாக தனது தாய்பாலை தானமாகக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, வெஸ்டர்ன் கிரேட் லேக் பகுதியில் அமைந்துள்ள மதர்ஸ் மில்க் பேங்கிற்கு 63 நாட்களுக்குத் தேவையான பாலை சேகரித்து பதப்படுத்தி தானமாக கொடுத்துள்ளார்.

சயிரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ என்னுடைய குழந்தை சாமுவேலைதான் என்னால் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் பால் இல்லாமல் அவதிப்படும் மற்ற குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ‘ என் குழந்தை இறந்துவிட்டது. பால் குடிக்க குழந்தை இல்லாதபோது ஏன் பால் சுரக்கிறது. நான் ஏன் திடீரென இரவு குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டுமே என்று எழுந்து கொள்கிறேன் என்று எனக்குள் மிகுந்த கோபம் வந்தது. இந்த உணர்வுகள் என் குழந்தை இன்னும் பூமியில் இருப்பதாக உணர வைக்கிறது. என்னுடைய இந்த செயலால் நிச்சயம் என் மகன் பெருமை கொள்வான் என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் ‘நான் 63 நாட்களுக்கு தேவையான பாலை கொடுத்தேன் என்பதற்காக ஓவர் சப்ளையர் இல்லை. இருப்பினும் என்னால் முடிந்தது என்பதுதான் உண்மை. குழந்தை பிறக்கும் என்று அறிவித்த தேதியிலிருந்து 63 நாட்களுக்கு முன்னரே பிறந்து விட்டது. இன்றுதான் குழந்தை பிறப்பதற்கான தேதி. எனவே இன்று பாலை NICU milk banks க்கு பாலை முதலும் , கடைசியுமாக தானமாக வழங்குகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்க :   இரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா?அப்ப இத படிங்க!

Related Posts

About The Author

Add Comment