கொலையாளிகள் வாக்குமூலம்!பிரியங்காவுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றி பலாத்காரம் செய்த கொடியவர்கள்:

தெலங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தவறு செய்திருந்தால் குற்றவாளிகளை பிரியங்காவை போலவே எரித்துக்கொலை செய்ய வேண்டும் என 4 பேரின் தாயும் கூறியுள்ளனர்.
ஐதராபாத்தின் சம்ஷாபாத் நரசய்யபல்லியை சேர்ந்த தரின் மூத்த மகள் பிரியங்கா. இவர் கட்சிபவுலியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 27ம் தேதி மாலை இரவுப்பணி இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு மருத்துவமனைக்கு மொபட்டில் சென்றார்.
பின்னர் 28ம் தேதி அதிகாலை ரங்காரெட்டி மாவட்டம், சட்டபல்லி பாலத்தின் கீழ் பிரியங்கா எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஷேர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அனந்தப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் முகமது ஆரிப், சிவா, நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேரை கடந்த 30ம் தேதி கைது செய்தனர். அப்போது, அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ‘பிரியங்கா மீது ஆசை ஏற்பட்டு அவரை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்தோம். அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து பலாத்காரம் செய்து கொன்றோம்’ என தெரிவித்தனர். பின்னர் அவர்களை ஐதராபாத் ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சென்ச்சுலகூடா சிறையில் அடைத்தனர்.
டாக்டர் பிரியங்கா கொலை குறித்து போலீசார் கூறியதாவது: பிரியங்காவின் மொபட் பஞ்சராகியுள்ளது. அப்போது மொபட்டை வாங்கிய முகமது ஆரிப், பஞ்சர் போட்டு தருவதாக கூறியுள்ளார். பஞ்சர் போட்டவுடன் உங்களுக்கு போன் செய்கிறேன் எனக்கூறி பிரியங்காவின் செல்போன் நம்பரை பெற்றுள்ளார். அதேபோல் தனது நம்பரையும் பிரியங்காவிடம் கொடுத்துள்ளார். பின்னர் 15 நிமிடம் கழித்து வண்டி ரெடியாகிவிட்டதா என பிரியங்கா போன் செய்துள்ளார். ஆனால் ரெடியாகவில்லை என முகமது ஆரிப் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் மொபட் ரெடியாகி விட்டதாக பிரியங்காவை அழைத்த 4 பேரும், மறைவான இடத்திற்கு கடத்திச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது பிரியங்கா உதவி கேட்டு கதறி அழுதுள்ளார். அதனை அவர்கள் 4 பேரும் கண்டுகொள்ளாமல், பிரியங்காவின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றியுள்ளனர். பின்னர் வாய் மற்றும் மூக்கை மூடி ஒவ்வொருவராக பலாத்காரம் செய்துள்ளனர். இரவு 9.20 முதல் 10.30 வரை இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
வாய் மற்றும் மூக்கை மூடியதால் மயக்கத்திற்கு சென்ற பிரியங்காவை ஆடையின்றி லாரி கேபினில் தூக்கி போட்டுள்ளனர். அங்கேயும் 4 பேரும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அவருக்கு ஆடை அணிவித்து மேம்பாலத்தின் கீழ் கொண்டு வந்து வீசியுள்ளனர். ஆனால் அவர் உயிர் பிழைத்து விடுவாரோ என்ற அச்சத்தில் எரித்துக்கொலை செய்துள்ளனர் என்றனர்.


‘3 காவலர்கள் சஸ்பெண்ட்’
பிரியங்கா காணாமல் போனபோது கடந்த 28ம் தேதி அவரது பெற்றோர் மற்றும் சகோதரி சம்ஷாபாத் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க சென்றனர். அப்போது அங்கிருந்த காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டதோடு, ‘சம்பந்தப்பட்ட பகுதி எங்கள் காவல்துறை எல்லையில் இல்லை’ என கூறியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் இதுகுறித்து பிரியங்காவின் பெற்றோர் அவர்களை பார்க்க வந்த முக்கிய பிரமுகர்களிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட சம்ஷாபாத் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார், ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் ஏர்போட் (ஆர்.ஜி.ஐ.ஏ) காவல் நிலைய தலைமை காவலர் பி.வேணுகோபால், ஏ.சத்தியநாராயண கவுடு தலைமை காவலர் (ஆர்.ஜி.ஐ.ஏ.காவல் நிலையம்) ஆகிய 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சம்ஷாபாத் ஆணையாளர் சஞ்ஞனார் நேற்று உத்தரவிட்டார்.
‘உயிருடன் எரித்து கொல்ல வேண்டும் பெற்ற தாய்மார்களே சீற்றம்’
கொலையாளி முகமது ஆரிப்பின் தாய் மவுலாபீ கூறுகையில், ‘எனது மகன் இவ்வளவு பெரிய குற்றம் செய்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவன் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்’ என்றார்.

சென்னகேசவலுவின் தாய் ஜெயம்மா கூறுகையில், எனது மகன் தவறு செய்தால் அவனை தூக்கில் போடவேண்டும். இல்லாவிட்டால் பெண் டாக்டரை எரித்துக்கொன்றது போல் அவனையும் எரித்துக்கொல்ல வேண்டும் என்றார். நவீனின் அம்மா லட்சுமி கூறுகையில், ‘எனது மகனை என்ன செய்தாலும் தவறில்லை. 3 பேருக்கும் வழங்கும் தண்டனையை எனது மகனுக்கும் கொடுங்கள்’ என்றார். சிவாவின் தாய் மணியம்மாள் கூறுகையில், ‘எனது மகனுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தவறு இருப்பது தெரிந்தால் தண்டனை கொடுங்கள். பெற்ற வயிறு பற்றி எரிகிறது’ என தெரிவித்தார்.

இதையும் படியுங்க :   பெண்ணின் மீது சபலத்தால் சரிந்துபோன சரவணபவன் ஹொட்டல் உரிமையாளரின் வாழ்க்கை!!

Related Posts

About The Author

Add Comment