அடேங்கப்பா செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரம்

செயற்கை சூரியன் உருவாக்கும் முயற்சிகள் தீவிரம்… 2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஹெச்.எல்-2எம் டோகாமாக் என்று செயற்கை சூரியனுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். செயற்கை சூரியனில் பொருத்தப்பட இருக்கும் காயில் அமைப்பு ஜூன் மாதம் அளிக்கப்பட இருக்கிறது. அது கிடைத்ததும், 2020ம் ஆண்டில் அதை வானில் நிறுவ முடிவு செய்துள்ளனர்.

நியூக்லியர் பியூசன் எனப்படும் அணுஇணைவு ((nuclear fusion)) மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை சூரியனில், 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் வெளிச்சமும் உருவாகும் என்றும், அதிலிருந்து சுத்தமான மற்றும் அளவில்லாத எரிசக்தியை பெற முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதையும் படியுங்க :   கூகுளில் வேலை கேட்டு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி!!

Related Posts

About The Author

Add Comment