சூப்பர் டிப்ஸ் !எலும்புகளின் தேய்மானத்தை தடுக்க உதவும் உணவுகள்!!

வேலைக்கு செல்லும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி… அவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்களை கவனித்துக் கொண்டு தங்களை தானே கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துவது இல்லை என்பதுதான் உண்மை.

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் அதிகமாக எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

நம் உடலில் மிக முக்கிய பங்காற்றுவது எலும்பு… அதற்கும் தேவையான சத்துக்கள் கிடைத்தால்தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நமது உடலில் உள்ள எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கால்சியம் சத்துக்கள் பெரிதும் உதவுகிறது.

மேலும் இந்த கால்சியம் சத்துக்கள் நம் உடம்பில் குறைந்துவிட்டால், எலும்புகள் தேய்மானம் அடைவதோடு, இரத்த செல்களின் உருவாக்கத்திலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்

எனவே எலும்புகளின் தேய்மானக் குறைபாடுகளை போக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுதான் நல்லதாகும். இப்போது இந்த எலும்புகளின் தேய்மானத்தைத் தடுக்க உதவும் உணவுகள் பற்றி இங்கு காண்போம்.

பால் மற்று தயிரில் கால்சியம் அதிகளவு நிறைந்துள்ளது. தினமும் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் கால்சியம் சத்துக்கள் நமது எலும்புகளுக்கு கிடைக்கும்.

மேலும் முட்டை, வெண்ணெய் போன்ற உணவுகளிலும் கூட புரதச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.

அடிக்கடி நாம் உலர் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் நமது எலும்புகளுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகளவு கிடைக்கும்.

எனவே ஒரு நாளைக்கு 5 உலர் அத்திபழ துண்டுகளை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கலாம்.

இதையும் படியுங்க :   கருவளையத்தை போக்கும் ஃபேஸ் பேக்குகள்

Related Posts

About The Author

Add Comment