பாகிஸ்தான் வருமாறு ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அழைப்பு

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

சந்திப்பின்போது பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையே இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையுடன் நெருங்கிய நட்புறவை பேணிவரும் தமது நாடு, பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய விடயங்களில் இலங்கையுடனான தொடர்பினை வலுவாக முன்னெடுத்துச் செல்ல ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டில் உள்ள பௌத்த பாரம்பரியத்துடன் தொடர்புடைய மரபுரிமைகளை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்ததோடு, வெகுவிரைவில் தமது நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றினை மேற்கொள்ளுமாறும் அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார உதவிகளுக்கு அப்பாற்பட்டு இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் போதைப்பொருள் கடத்தல் , போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல் ஆகியன தொடர்பில் தற்போது நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்ததோடு , இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் தமக்கு உதவியளிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மொஹமட் பைசல் மற்றும் இலங்கைக்கான பதில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதையும் படியுங்க :   ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு கம்பஸ் விவகாரத்திற்கு கோட்டாபய அரசில் ஆரம்பமானது நெருக்கடி

Related Posts

About The Author

Add Comment