இவர்கள் தான் பெண் மருத்துவர் இறந்த பிறகும் பாலியல் வன்கொடுமை செய்த காமக் கொடூரன்கள்

ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் மருத்துவரை, இறந்த பிறகும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் 3 பேர் 18 வயதுக்கு குறைவான மைனர்கள் எனத் தெரிய வந்துள்ளது. அதில் முகமது பாஷா என்பவர் லாரி ஓட்டுனர். மற்ற மூவரும் க்ளீனர்கள் ஆவர். தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணையை மேற்கொண்டு வந்த போலீசார், கடந்த சனிக்கிழமை இவ்வழக்கு குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் மூலம் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மருத்துவர் பிரியங்காவின் இரு சக்கரவாகனத்தை முன்பே திட்டமிட்டு பஞ்சர் செய்த இவர்கள் உதவி செய்வது போல் நடித்துள்ளனர். பின்னர், போதை கலந்த குளிர்பானத்தை பிரியங்காவிற்கு கொடுத்து, அவரை கட்டையால் அடித்து மயக்கம் அடைய வைத்தனர்.
இதையடுத்து, அவரை லாரியினுள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளனர். பிரியங்கா இறந்த பிறகும் நான்கு பேர் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்தனர்.

newstm.in

இதையும் படியுங்க :   திருப்பூரில் கொடூரமாக கொல்லப்பட்ட புதுமாப்பிள்ளை

Related Posts

About The Author

Add Comment