கொலைசெய்யப்பட்ட பிரியங்காவின் வீடியோவை தேடிய இந்தியர்கள் ..! அதிர வைக்கும் ரிப்போர்ட்

கடந்த வாரம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

இந்நிலையில், இது குறித்த வீடியோவை ஆபாச இணையத்தில் இந்தியர்கள் தேடியுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி(26) கால்நடை மருத்துவராக பணிபுரிந்தார்.

இந்நிலையில், இவரை 4 லாரி ஓட்டுநர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தனர்.

இந்நிலையில், பொலிசார், இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நிகழ்ந்த தினத்திலிருந்தே, பலரும் பிரியங்கா கொலை குறித்து நீதி கேட்டு சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி பதிவுகளை மேற்கொண்டு வந்தனர்.

இது ஒருபுறமிருக்க, பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை சுமார் 80 லட்சம் முறை இந்தியர்கள் ஆபாச இணையத்தில் தேடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க :   சொந்த தந்தையை கொல்ல முயன்ற பெண் மருத்துவர்: மருத்துவமனைக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Related Posts

About The Author

Add Comment