சுசி லீக்ஸ் பற்றி உண்மையை உடைத்த பாடகி சுசித்ரா..நடந்தது இதுதான்..

 

கடந்த 2017ல் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவை அனைத்தும், பாடகி சுசித்ரா ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதனால் இவரின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அவரது கணவர் கார்த்திக் தெரிவித்தார்.

அதன்பின்பு சுசித்ராவும், கார்த்திக்கும் கறுத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து சுசித்ரா காணாமல் போய்விட்டதாக அவரது சகோதரி புகார் அளித்தார்.

விசாரணை செய்த பொலிசார், சுசித்ரா நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருப்பதை கண்டறிந்தனர். அப்போது தான் காணாமல் போகவில்லை எனவும் தனது சகோதரி சுஜிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் போலீசில் தெரிவித்தார் சுஜிதா.

இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுசித்ரா, என் லட்டக்கணக்கானோர் ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். ஆனால் யாரோ என் ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்திவிட்டன்ர். இதனால் நான் மன அழுத்ததிற்கு உள்ளானேன்.

அதற்கு மற்றுமொரு காரணம் என்னுடைய விவாகரத்துக்கும் கூட. எனக்கு விவாகரத்தாகி ஒரு வருட காலமாகிறது. என்னுடைய விவாகரத்துக்குமான பேச்சும், வீடியோ வெளியானதும் ஒரே நேரத்தில் நடந்ததால் எனக்கு அந்த காலகட்டம் கஷ்டமாக இருந்தது.

மேலும், தேவையில்லாம தனுஷ், அனிருத் எல்லாரையும் சம்பந்தப்படுத்திவிட்டார்கள். அப்படி வெளியான வீடியோக்கள் ஒன்றைக் கூட நான் இன்னும் பார்க்கவில்லை. அந்த வீடியோக்கள் மார்ஃபிங் செய்யப்பட்டதா என்று கூட எனக்குத் தெரியாது. யார் இதை செய்தார்கள் என்பது காலப்போக்கில் எனக்குத் தெரிய வரலாம்.

அதேநேரம் நான் கல்வி கற்க ஆரம்பித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது சமையல் கலை. லண்டனுக்குச் சென்று பிரெஞ்ச் குக்கிங் கற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறேன். அதை நம் மக்களுக்கும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்.

யூடியூபில் சுச்சி குக் என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட இருக்கிறேன். அதற்கு காரணம் யார் சுச்சி லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கை தவறாக பயன்படுத்தினார்களோ அவர்களின் மூக்கில் குத்துவிடுவது போல் இருக்கத்தான் சுச்சி குக். டிசம்பர் 24-ம் தேதி நானும் ரஞ்சித்தும் பணியாற்றிக் கொண்டிருக்கும் பாடல் ஒன்று வெளியாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   நயன்தாரா பற்றி கார்த்தி கூறிய வார்த்தையால் வருத்தத்தில் ரசிகர்கள்

Related Posts

About The Author

Add Comment